அந்த பையன் பேட்டிங் ஆடுறத பார்க்க எனக்கே ரொம்ப ஆசையா இருக்கு!! முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை கவர்ந்த இந்திய வீரர்

Published : Apr 13, 2019, 12:27 PM IST
அந்த பையன் பேட்டிங் ஆடுறத பார்க்க எனக்கே ரொம்ப ஆசையா இருக்கு!! முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை கவர்ந்த இந்திய வீரர்

சுருக்கம்

முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரயன் லாராவையே இந்திய வீரர் ஒருவர் கவர்ந்துள்ளார். அந்த வீரரின் ஸ்டைலிஷான பேட்டிங்கால் கவர்ந்திழுக்கப்பட்ட லாரா, அவரது பேட்டிங்கை தினம் தினம் பார்க்கும் அளவிற்கு ஆவலாக இருப்பதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. 

சிஎஸ்கே, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 6 அணிகளும் சிறப்பாக ஆடிவருகின்றன. சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவது உறுதியாகிவிட்டது. சீசனை மந்தமாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ், தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளுடன் வெகுண்டெழுந்துள்ளது. 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் அபாரமாக ஆடிவருகின்றன. பஞ்சாப் அணியில் கடந்த சீசனில் அபாரமாக ஆடிய ராகுல், அதன்பின்னர் இந்திய அணிக்காக ஆடும்போது ஃபார்மில் இல்லாமல் தவறான ஷாட்டுகளை ஆடி தொடர்ந்து சொதப்பிவந்தார். இந்நிலையில், நடப்பு சீசனில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி தன்னம்பிக்கையுடன் சிறப்பாக ஆடிவருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி சதமடித்தார். அந்த போட்டியில் பஞ்சாப் அணி 197 ரன்களை குவித்தும், பொல்லார்டின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. எனினும் ஐபிஎல் கெரியரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார் ராகுல்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கியே இருந்த ஜாம்பவான் பிரயன் லாரா, இந்த சீசனில் முதன்முறையாக ஐபிஎல் அனலிஸ்ட் குரூப்பில் இணைந்துள்ளார். கேஎல் ராகுலின் ஸ்டைலிஷான மற்றும் அபாரமான பேட்டிங்கை பார்த்து அசந்து போயுள்ளார் பிரயன் லாரா. 

ராகுல் குறித்து பேசிய பிரயன் லாரா, ஒரு பேட்ஸ்மேனாக ராகுலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் ஸ்டைலிஷான வீரர்; அவரது பேட்டிங் டெக்னிக் அபாரமாக உள்ளது. மும்பைக்கு எதிரான போட்டியில் கெய்ல் ஆட்டமிழந்ததும், தான் கடைசி வரை களத்தில் இருந்து ஆட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து சிறப்பாக ஆடினார். ஐபிஎல்லில் சதமடிப்பது சிறப்பான விஷயம். ராகுல் பேட்டிங் ஆடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பிரயன் லாரா வியந்து பாராட்டினார். 

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான வீரர் பிரயன் லாரா. மிகச்சிறந்த ஜாம்பவானான பிரயன் லாராவையே கவர்ந்துள்ளார் ராகுல். 
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav டீம் இந்தியாவுக்கு வந்தா ரொம்ப டேஞ்சர்... பேட்டிங்கையே வீடியோ கேம் மாதிரி விளையாடுறான்..
ஜடேஜாவையே மிரட்டிய 14 வயது சிறுவன்! வைபவ் சூர்யவன்ஷியின் அனல் பறக்கும் பேட்டிங்