#ICCWTC ஃபைனலில் #INDvsNZ பலப்பரீட்சை..! எந்த அணிக்கு வெறி வாய்ப்பு..? பிரண்டன் மெக்கல்லம் அதிரடி

Published : Jun 06, 2021, 03:08 PM IST
#ICCWTC ஃபைனலில் #INDvsNZ பலப்பரீட்சை..! எந்த அணிக்கு வெறி வாய்ப்பு..? பிரண்டன் மெக்கல்லம் அதிரடி

சுருக்கம்

இந்தியா - நியூசிலாந்து மோதும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று பிரண்டன் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணி வெற்றி பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறியுள்ளார். 60 சதவிகித வெற்றி வாய்ப்பு நியூசிலாந்துக்கு இருப்பதாக தெரிவித்தார். இந்திய அணி மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்றும் இந்திய அணியும் வெற்றிக்காக கடைசி வரை போராடும் என்றும் மெக்கல்லம் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
டி20 உலகக் கோப்பைக்கு கடப்பாரை டீமை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. சிக்சர் மழைக்கு ரெடியா?