IPL 2021 ஃபைனலில் ஆண்ட்ரே ரசல் ஏன் ஆடல..? கேகேஆர் ஹெட்கோச் பிரண்டன் மெக்கல்லம் விளக்கம்

By karthikeyan VFirst Published Oct 16, 2021, 4:31 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் இறுதி போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆண்ட்ரே ரசல் ஆடாதது ஏன் என்று கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் கேகேஆர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. இந்த சீசன் முழுவதுமே கேகேஆர் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் பெரிய பிரச்னையாக இருந்தது. அது ஃபைனலிலும் எதிரொலித்தது.

அமீரக பாகத்தில் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் - ஷுப்மன் கில்லின் சிறப்பான பேட்டிங்கால் தான் அந்த அணி ஃபைனல் வரை சென்றது. ஃபைனலிலும் அவர்கள் இருவரும் நன்றாக ஆடி அரைசதம் அடித்தனர். ஆனால் அவர்கள் அவுட்டானதும், மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் படுமோசமாக சொதப்பியதால் கேகேஆர் அணி தோல்வியை தழுவியது.

கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரும், சிறந்த ஆல்ரவுண்டரும், அதிரடி ஃபினிஷருமான ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாக இடையில் சில போட்டிகளில் ஆடாத நிலையில், ஃபைனலில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபைனலிலும் அவர் ஆடவில்லை. அவர் ஆடாதது கேகேஆர் அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது.

இதையும் படிங்க - இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட்..! டிராவிட்டுடன் டீலை முடித்த பிசிசிஐ

இந்நிலையில், ரசல் ஃபைனலில் ஆடாதது குறித்து பேசிய கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாகத்தான் ஆடவில்லை. அவர் காயத்திலிருந்து மீண்டுவர மிகக்கடுமையாக உழைத்தார். ஆனாலும் அவரை ஆடவைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. கடைசியாக, நன்றாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அதே அணியுடன் ஃபைனலில் ஆடுவது என்று முடிவெடுத்தோம் என்று மெக்கல்லம் கூறினார்.
 

click me!