#IPL2021 ஆர்சிபி அணியின் பெஸ்ட் ஆடும் லெவன் காம்பினேஷன்..! ஆஸி., முன்னாள் வீரரின் தேர்வு

By karthikeyan VFirst Published Apr 3, 2021, 4:09 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஆர்சிபி அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக். 
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

ஆனால் கடந்த சீசன்களை போல அல்லாமல் இந்த சீசனில் ஆர்சிபி அணி நல்ல காம்பினேஷனை கொண்ட வலுவான அணியாக திகழ்கிறது.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் சிறந்த ஆடும் லெவனை ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். அதன்படி, விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக். கோலி இந்த சீசனில் கண்டிப்பாக தொடக்க வீரராகத்தான் இறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. 

அதற்கடுத்தடுத்த பேட்டிங் ஆர்டரில் டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், முகமது அசாருதீன் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக். 

ஸ்பின்னர்களாக ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹாக். இவர்கள் இருவரும் தான் கண்டிப்பாக ஸ்பின்னர்களாக ஆடுவார்கள்.

ஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இந்திய பவுலர்களுடன் ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸனை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணியால் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசனை ஆடும் லெவனில் ஹாக் தேர்வு செய்யவில்லை.

பிராட் ஹாக் தேர்வு செய்த ஆர்சிபியின் ஆடும் லெவன்:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், முகமது அசாருதீன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்ஸன், யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!