42 வயசு வரை ஆடி முரளிதரனின் 800 விக்கெட்டையே தகர்ப்பார் அஷ்வின்..! ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் நம்பிக்கை

By karthikeyan VFirst Published May 27, 2021, 8:01 PM IST
Highlights

ரவிச்சந்திரன் அஷ்வின் 42 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்டுகள் என்ற ரெக்கார்டை தகர்த்துவார் என்று ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்து சர்வதேச கிரிக்கெட்டின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவராக ஜொலிக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசி போட்டிக்கு போட்டி பல விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக 200, 250, 300, 350 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்த அஷ்வின், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஷ்வின். 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 401 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஷ்வின்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் அஷ்வின், இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறார். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் பந்துவீசிய ஃபார்மை தொடர்ந்தால், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் முடிவை தீர்மானிக்கக்கூடிய பவுலராக திகழ்வார்.

34 வயதான அஷ்வின், 42 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி 800 விக்கெட்டுகள் என்ற முரளிதரனின் சாதனையை தகர்கக்கூட வாய்ப்பிருப்பதாக ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், அஷ்வின் 42 வயது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார் என்று நினைக்கிறேன். அவரது பேட்டிங் வேண்டுமானாலும் தரம் குறையலாம். ஆனால் அவரது அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மிகவும் அபாயகரமான பவுலராக திகழ்வார்.  கண்டிப்பாக 600க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்துவார். முரளிதரனின் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையைக்கூட தகர்த்த வாய்ப்பிருக்கிறது என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.
 

click me!