Devon Conway டி20 உலக கோப்பை ஃபைனலில் இருந்து காயத்தால் விலகிய அதிரடி வீரர்..! நியூசிலாந்து அணிக்கு மரண அடி

Published : Nov 12, 2021, 07:57 PM ISTUpdated : Nov 12, 2021, 07:59 PM IST
Devon Conway டி20 உலக கோப்பை ஃபைனலில் இருந்து காயத்தால் விலகிய அதிரடி வீரர்..! நியூசிலாந்து அணிக்கு மரண அடி

சுருக்கம்

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அதிரடி வீரர் டெவான் கான்வே விலகியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு.  

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வரும் 14ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக ஆடிவருகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பிறகு, அதிலிருந்து மீண்டெழுந்து அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து அணியில் பெரிய மேட்ச் வின்னர்கள் என்று யாரும் இல்லை. அந்த அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கின்றனர். இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, வில்லியம்சன், மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம் என ஒவ்வொரு வீரருமே அணிக்கு தேவையானபோது வெகுண்டெழுந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வரும் 14ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ள நிலையில், டெவான் கான்வே கையில் காயம் காரணமாக ஃபைனலிலிருந்து விலகியுள்ளார். டெவான் கான்வே விக்கெட் கீப்பிங் செய்வதால் தான், கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டரை ஆடவைத்து, டிம் சேஃபெர்ட்டை உட்கார வைத்தது அந்த அணி. இப்போது கான்வே ஆடாததால் டிம் சேஃபெர்ட் ஃபைனலில் அவருக்கு பதிலாக ஆடுவார்.

அதிரடி பேட்ஸ்மேனான டெவான் கான்வே, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கூட, 38 பந்தில் 46 ரன்கள் அடித்து முக்கியமான இன்னிங்ஸை ஆடிக்கொடுத்தார் கான்வே. எனவே கான்வே ஃபைனலிலிருந்து விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்
Vaibhav Suryavanshi: அந்த 'A' செலிப்ரேஷன்... சீக்ரெட்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!