வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக புவனேஷ்வர் குமார் பிடித்த அபாரமான கேட்ச்.. வீடியோ

By karthikeyan VFirst Published Aug 12, 2019, 3:29 PM IST
Highlights

போட்டியில் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங்கில் அசத்திய நிலையில், புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் அசத்தினார். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான அரைசதத்தால் 50 ஓவர் முடிவில் 279 ரன்களை குவித்தது. மழை குறுக்கீட்டால் 46 ஓவரில் டி.எல்.எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 270 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 42 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.   இந்த போட்டியில் கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங்கில் அசத்திய நிலையில், புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் அசத்தினார். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

இந்த போட்டியில் ரோஸ்டான் சேஸின் கேட்ச்சை புவனேஷ்வர் குமார் டைவ் அடித்து ஒற்றை கையில் அபாரமாக பிடித்தார். புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை சேஸ், தடுத்து ஆட அந்த பந்து நேராக எகிறியது. அதை டைவ் அடித்து ஒற்றை கையில் பிடித்தார் புவனேஷ்வர் குமார். அந்த அபாரமான கேட்ச்சின் வீடியோ இதோ.. 

What a catch by pic.twitter.com/t9aHZBqMx3

— Prasad prabhudesai (@Prasadprabhude2)
click me!