நான் வீழ்த்திய அந்த ஒரு விக்கெட் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை..! புவனேஷ்வர் குமார் உருக்கம்

By karthikeyan VFirst Published Jun 26, 2020, 4:19 PM IST
Highlights

புவனேஷ்வர் குமார் தனது கிரிக்கெட் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
 

புவனேஷ்வர் குமார் தனது கிரிக்கெட் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

புவனேஷ்வர் குமார் அருமையாக ஸ்விங் செய்யக்கூடிய ஃபாஸ்ட் பவுலர். 2012ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் ஆடிவரும் புவனேஷ்வர் குமார், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார்.

இந்திய அணிக்காக 21 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் புவனேஷ்வர் குமார். பும்ரா, ஷமியை போல 140-150 கிமீ வேகத்திற்கெல்லாம் வீசமாட்டார் புவனேஷ்வர் குமார். ஆனால் இரண்டு திசைகளிலும் அருமையாக ஸ்விங் செய்யக்கூடியவர் புவனேஷ்வர் குமார் என்பதால், புதிய பந்தில், எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவிடுவார். 

காயம் காரணமாக தொடர்ச்சியாக இந்திய அணியில் ஆடமுடியாமல் தவிக்கிறார். புவனேஷ்வர் குமார் - பும்ரா ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி, எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த பின்னர் தான், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் என்பது சிறப்பாக ஃபார்ம் ஆனது. புவனேஷ்வர் குமார் - பும்ரா - ஷமி - இஷாந்த் சர்மா - உமேஷ் யாதவ் என இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கொண்ட அணியாக திகழ்கிறது. 

இந்நிலையில், தனது கிரிக்கெட் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த சம்பவத்தை பற்றி, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார். 

2008-09 ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. அந்த போட்டியில், மும்பை அணிக்காக ஆடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை டக் அவுட்டாக்கினார். அதுதான் அவரது கிரிக்கெட் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். 

சச்சினை அவுட்டாக்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசிய புவனேஷ்வர் குமார், ரஞ்சி போட்டியில் சச்சின் டெண்டுல்கரை அவுட்டாக்கிய சம்பவம் தான் மிகப்பெரிய திருப்புமுனை. அதற்கு முன்பே நான் 30-35 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். ஆனால் சச்சினை அவுட்டாக்கிய பின்னர் தான், அனைவரின் கவனமும் என் மீது திரும்பியது. அதன்பின்னர் எனது பழைய புள்ளிவிவரங்களை சேமிக்க தொடங்கினர். எனவே சச்சினை அவுட்டாக்கிய அந்த சம்பவம் தான் எனது கெரியரின் திருப்புமுனை என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். 
 

click me!