IND vs SA: டி20 கிரிக்கெட்டில் செம ரெக்கார்டை படைக்கப்போகும் புவனேஷ்வர் குமார்

Published : Jun 14, 2022, 06:15 PM IST
IND vs SA: டி20 கிரிக்கெட்டில் செம ரெக்கார்டை படைக்கப்போகும் புவனேஷ்வர் குமார்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் பெரிய சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார்.  

இந்தியா  - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலுமே தோல்வியடைந்தாலும், இந்த தொடரில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருப்பது புவனேஷ்வர் குமார் தான். முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆனால் 2வது போட்டியில் அபாரமாக ஸ்விங் செய்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் வெறும் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

அந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட் பவர்ப்ளேயில் வீழ்த்தினார். அந்த 3 விக்கெட்டுடன் சேர்த்து புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் வெஸ்ட் இண்டீஸின் சாமுவேல் பத்ரி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகிய இருவருடன் புவனேஷ்வர் குமார் முதலிடம் வகிக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20யில் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் அவர்களை முந்தி, பவர்ப்ளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!