இது மாதிரி ஒரு பவுலிங்கை பார்த்து ரொம்ப காலம் ஆயிடுச்சு.. பும்ராவிற்கு கிடைத்த பெரும் புகழ்ச்சி

By karthikeyan VFirst Published Aug 29, 2019, 4:40 PM IST
Highlights

சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே அறியப்பட்ட இந்திய அணி, பும்ராவின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி ஆகியோரும் அசத்திவருகின்றனர்.
 

சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே அறியப்பட்ட இந்திய அணி, பும்ராவின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி ஆகியோரும் அசத்திவருகின்றனர்.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அசத்துகிறார் பும்ரா. இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக திகழ்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரேயொரு மட்டுமே வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸை 100 ரன்களுக்கு சுருட்ட முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

முதல் இன்னிங்ஸிலும், க்ராஸ் சீமில் வீசச்சொல்லி இஷாந்த் சர்மாவிற்கு ஐடியா கொடுத்தது பும்ரா தான். பொதுவாகவே ஆட்டத்தின் சூழல், ஆடுகளத்தின் தன்மை, பேட்ஸ்மேனின் பிளஸ் - மைனஸ் அறிந்து பந்துவீசக்கூடியவர் பும்ரா. புத்திசாலித்தனமான பவுலரான பும்ரா, தனது சமயோசித புத்தியையும் சிறந்த பவுலிங்கையும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வீசி, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்நிலையில் பும்ராவின் பவுலிங்கை புகழ்ந்து தள்ளியுள்ளார் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண். பும்ரா குறித்து பேசியுள்ள பரத் அருண், பும்ரா சிந்தித்து பந்துவீசக்கூடியவர். சூழலுக்கு ஏற்றவாறு அருமையாக வீசுவார். இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசிய விதம் அபாரமானது. லெந்த்தை மாற்றி மிகச்சிறப்பாக வீசினார். நீண்டகாலத்திற்கு பின் நான் பார்த்த அருமையான பவுலிங் ஸ்பெல் இதுதான் என்று பரத் அருண் புகழ்ந்தார். 

பும்ரா வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை பெற்றிருப்பதால், அவரது பவுலிங்கையும் திட்டங்களையும் பேட்ஸ்மேன்களால் எளிதில் கணிக்கமுடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சீராக 140 கிமீ வேகத்திலும் மிகத்துல்லியமாகவும் வீசும் திறன் பெற்றவர் பும்ரா என்று பரத் அருண் புகழ்ந்துள்ளார். 
 

click me!