
Bengaluru Chinnaswamy Stadium Stampede : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இதில் முதல் முறையாக ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது டிராபியை கைப்பற்றி 18 ஆண்டுகால சோதனைக்கு முடிவு கட்டி புதிய சரித்திரம் படைத்தது. இந்த சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில் பெங்களுரு சின்னச்சுவாமி மைதானத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 1 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி மார்க்கெடிங் தலைவர் நிகில் சோசலே உள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், பாராட்டு விழாவில் எங்களுக்குப் பங்கு இல்லை. அனுமதி கேட்டது உண்மை. ஆனால், நிகழ்வு சீர்குலைந்ததற்கு முழுக்க முழுக்க அரசு தான் காரணம் என்று ஆர்சிபி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் மார்க்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர்கள் வேறெங்கும் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவர்களது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டது.