#IPL2021 கேப்டன்களுக்கு செம ஆப்பு அடித்த பிசிசிஐ..! இதை மட்டும் செய்தால் கேப்டனுக்கு தடை

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 1:40 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் அணிகளின் கேப்டன்கள் பந்துவீச, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க, பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் சில விதிகள், இந்த ஐபிஎல் சீசனில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகத்திற்குரிய கேட்ச்களின் முடிவை நேரடியாக டிவி அம்பயரே எடுப்பார். இனிமேல் சாஃப்ட் சிக்னல் முடிவு கிடையாது. மேலும், ரன்னை பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஓடி முடிக்கிறார்களா என்பதையும் டிவி அம்பயர்களே கண்காணிப்பார்கள். இந்த முடிவுகள் எல்லாம் தொடர் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், அதில் மாற்றங்களை செய்துள்ளது பிசிசிஐ.

அதேபோல, ஐபிஎல் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வதை தடுக்க, விதிகளை கடுமையாக்கியுள்ளது பிசிசிஐ. ஒன்றரை மணி நேரத்தில்(டைம் அவுட் இரண்டரை நிமிடங்களை தவிர்த்து) 20 ஓவர்கள் வீச வேண்டும். ஒரு மணி நேரத்தில் 14.11 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.

பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 2வது முறையாக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 3வது முறையாக அதே தவறை செய்தால், அணியின் கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு போட்டியில் ஆட தடையும் விதிக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரித்துள்ளது.
 

click me!