திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி! ஆனால் இதுமட்டும் நடக்காது.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்

By karthikeyan VFirst Published Dec 4, 2021, 2:34 PM IST
Highlights

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. இந்தியாவில் நடந்துவரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடரும் வரும் 7ம் தேதி முடிவடைகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த தொடரை முடித்துவிட்டு இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 

டிசம்பர் 17, 26 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. அதைத்தொடர்ந்து ஜனவரி 11, 14, 16 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. அதன்பின்னர் டி20 தொடர் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் இருப்பதால் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்  குறித்த உறுதியான தகவல் இல்லாமல் இருந்த நிலையில், இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும். 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும். இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும். ஆனால் 4 டி20 போட்டிகளை மட்டும் பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்று பிசிசிஐ தரப்பில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

எனவே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும். டி20 போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 

click me!