#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ..!

Published : Jul 25, 2021, 08:27 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ..!

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனுக்கான எஞ்சிய போட்டிகளின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.  

ஐபிஎல் 14வது சீசனில் லீக் சுற்றில் 29 போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்து அறிவித்தது. 

எஞ்சிய ப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடத்தப்படவுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான முழு போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

அதன்படி, செப்டம்பர் 19ம் தேதி சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன. லீக் போட்டிகள் அக்டோபர் 6ம் தேதி முடிகின்றன. அக்டோபர் 10, 11, 13 ஆகிய தேதிகளில் முறையே முதல் தகுதிச்சுற்று, எலிமினேட்டர் மற்றும் 2வது தகுதிச்சுற்று போட்டிகளும், அக்டோபர் 15ம் தேதி ஃபைனலும் நடக்கவுள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!