ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டிகளில் கூட ஆடமுடியாது.. கங்குலி அதிரடி

Published : Jan 29, 2020, 11:15 AM ISTUpdated : Jan 29, 2020, 11:22 AM IST
ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டிகளில் கூட ஆடமுடியாது.. கங்குலி அதிரடி

சுருக்கம்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவிற்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்ற மிகப்பெரிய பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றவர்.  

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லின் மூலமாகத்தான் அடையாளம் காணப்பட்டு இந்திய அணியில் அறிமுகமானார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் மிகச்சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கியதன் விளைவாக, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான இந்திய அணிகளிலும் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்து ஆடிவந்தார். 

உலக கோப்பையில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ஆடியதுதான் கடைசி. அவருக்கு கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் முதுகுப்பகுதியில் அடிபட்டது. அதனால் நீண்ட ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்ற ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இடைக்கால தடை பெற்றார். அதிலிருந்தும் மீண்டுவந்த ஹர்திக் பாண்டிய, 2019 ஐபிஎல்லிலும் அதைத்தொடர்ந்து உலக கோப்பையிலும் ஆடினார். 

Also Read - சமகால கிரிக்கெட்டின் 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள், 2 பவுலர்கள் யார்.. மெக்ராத்தின் அதிரடி தேர்வு

உலக கோப்பைக்கு பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே ஆடிய ஹர்திக் பாண்டியாவிற்கு மீண்டும் முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தற்போது நடந்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் அவரால் ஆடமுடியாமல் போனது. 

Also Read - 3வது டி20.. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் முழு உடற்தகுதியை பெறவில்லை என்பதால், அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார். 

ஹர்திக் பாண்டியா எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டிகளில் ஆடுமளவிற்குக்கூட உடற்தகுதியை பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனால்தான் அவர் ரஞ்சி போட்டியில் கூட பரோடா அணிக்காக ஆடவில்லை. 

Also Read - அண்டர் 19 உலக கோப்பை.. முதல் ஓவருலயே 3 விக்கெட்.. கார்த்திக் தியாகியின் அபாரமான பவுலிங்கில் சரணடைந்த ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி

ஹர்திக் பாண்டியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு, கங்குலியின் கூற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup Semi Final: இங்கிலாந்தை சிதறடித்த இந்தியா.. 254 ரன்கள் இலக்கு..!
212+ ஸ்ட்ரைக் ரேட்.. ஜஸ்ட் மிஸ்ல் சதத்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா