புரட்சி செய்ய துடிக்கும் தாதா.. சாத்தியப்படுத்தி சாதித்துவிட்டால் கெத்துதான்

By karthikeyan VFirst Published Oct 29, 2019, 5:50 PM IST
Highlights

பிசிசிஐயின் புதிய தலைவரான முன்னாள் கேப்டன் கங்குலி, உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்தவும் உள்நாட்டு வீரர்களை பொருளாதார ரீதியாக பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கவும் முயல்கிறார்.
 

பிசிசிஐ தலைவர் கங்குலி, தலைவராக பொறுப்பேற்றது முதலே துடிப்பாகவும் தீவிரமாகவும் செயல்படுவதுடன், பல அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார். கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரை சந்தித்து பேசினார். அடுத்ததாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட்டை சந்திக்கவுள்ளார் கங்குலி.

இவ்வாறு தீவிரமாக இயங்கிவரும் கங்குலி, சொன்னபடியே உள்நாட்டு வீரர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைய அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு வீரர்களுக்கு அவர்கள் ஆடும் போட்டிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. முதல் தர கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. 

இந்திய அணியில் ஆடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு இவ்வளவு தொகை என, ஒப்பந்தம் போடப்படுகிறது. அதேபோலவே உள்நாட்டு வீரர்களுக்கும் ஆண்டு ஒப்பந்தம் போடப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார். தேசிய அணியில் ஆடும் வீரர்கள் மொத்தமாகவே 20-25 வீரர்கள்தான் இருப்பார்கள். ஆனால் உள்நாட்டு போட்டிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்குவது சவாலான காரியம். அதை செய்வதாக கங்குலி தெரிவித்துள்ளார். அதை வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டால் பெரிய சாதனைதான். 
 

click me!