அந்த கிரிக்கெட் தொடர் ரத்து.. கங்குலி அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Jul 8, 2020, 9:00 PM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. உலகின் பணக்கார டி20 லீக் தொடரான ஐபிஎல், கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்காமல் இந்த போட்டி நடத்தப்படுகிறது. 

இந்திய வீரர்கள் எப்போது களம் காண்பார்கள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது. ஐபிஎல்லுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இதற்கிடையே செப்டம்பரில் ஆசிய கோப்பை தொடர் நடப்பதாக இருந்த நிலையில், அந்த தொடர் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பை தொடரில் ஆசிய நாடுகள் மட்டுமே கலந்துகொண்டு ஆடும். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே கலந்துகொண்டு ஆடும். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடைசியாக 2018ல் இந்தியாவில் நடந்தது. அந்த கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. 

இந்நிலையில், வரும் செப்டம்பரில் நடக்கவிருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல்லை நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. 
 

click me!