2வது ஓவரிலேயே ஸ்டம்ப்பை கழட்டிய கேப்ரியல்..! ரன்னே அடிக்காமல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Jul 8, 2020, 7:28 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, 2வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணி, 2வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெ போட்டி தொடங்கியுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது. 

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் இந்த போட்டி நடத்தப்படுகிறது. சவுத்தாம்ப்டனில் இன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால் தாமதமானது. முதல் செசன் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டது. 

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களமிறங்கினர். 

முதல் ஓவரை கீமார் ரோச் வீசினார். அந்த ஓவரை ரோரி பர்ன்ஸ் எதிர்கொண்டார். முதல் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. இதையடுத்து ஷெனான் கேப்ரியல் வீசிய இரண்டாவது ஓவரை சிப்ளி எதிர்கொண்டார். அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே கேப்ரியலின் பந்தில் கிளீன் போல்டாகி ரன்னே எடுக்காமல் சிப்ளி வெளியேறினார். இங்கிலாந்து அணி ரன் கணக்கை தொடங்கும் முன்பே விக்கெட்டை இழந்தது. இதையடுத்து பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். 2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் 10-15 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதால் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 2 ஓவர்கள் வீசிய நிலையில், மீண்டும் ஆட்டம் தடைபட்டுள்ளது.
 

click me!