கொரோனா அச்சுறுத்தல்.. தள்ளிப்போகிறதா ஐபிஎல்..? தெளிவுபடுத்திய தாதா

By karthikeyan VFirst Published Mar 9, 2020, 1:52 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசன் ஏற்கனவே திட்டமிட்டபடியே வரும் 29ம் தேதி தொடங்குமா அல்லது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போகுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெளிவுபடுத்தியுள்ளார். 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது. இந்தியாவும் கொரோனாவுக்கு விதிவிலக்கல்ல. உலகம் முழுதும் சுமார் 3700 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நிலையில், ஐபிஎல் திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி தொடங்குமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஐபிஎல் போட்டிகளை பார்க்க ஆயிரக்கணக்கானோர் ஸ்டேடியத்தில் கூடுவார்கள். எனவே அது ரிஸ்க் என்பதால் இந்த சந்தேகம் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தள்ளிப்போகலாம் என்ற பேச்சும் அடிபட்டது. 

இந்நிலையில், ஐபிஎல் திட்டமிட்டபடி, வரும் 29ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ கங்குலி உறுதி செய்துள்ளார். இந்தியா டுடேவிற்கு இதுகுறித்து பேசிய கங்குலி, ஐபிஎல் திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி தொடங்கும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். 

Also Read - சச்சின் கெரியரில் மறக்க முடியாத தினம் மார்ச் 9.. ஆஸி.,யை அடித்து நொறுக்கிய டெண்டுல்கர்.. கெரியரில் சிறந்த சதம்

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கே அணியும் மோதுகின்றன. 

Also Read - ஒப்புக்கு சப்பாணி ரிஷப் பண்ட்.. உறுதி செய்த இந்திய அணி
 

click me!