ஐபிஎல் 15வது சீசன்: கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு..! பிசிசிஐ வெளியிட்ட முக்கியமான தகவல்

By karthikeyan VFirst Published Oct 13, 2021, 10:44 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான 2 புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறும் கால அவகாசம் அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், வரும் 15ம் தேதியுடன் இந்த சீசன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008லிருந்து ஒவ்வொரு சீசனிலும் 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.

அதனால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.7000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 2 அணிகளில் ஒரு அணி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட அகமதாபாத்தின் பெயரில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஏல விண்ணப்பத்தை பெறும் கால அவகாசம் அக்டோபர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்..! சூப்பர் ஆல்ரவுண்டருக்கு அணியில் இடம்

click me!