கோலி பயப்படுற ஆளு இல்ல.. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பார்.. பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Jul 29, 2019, 10:40 AM IST
Highlights

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 
 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கவுள்ளது. அதன்பிறகு மற்ற போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணி இன்று அமெரிக்கா புறப்படுகிறது. 

பொதுவாக எந்தவொரு சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி கிளம்பினாலும், அதற்கு முன்னதாக கேப்டன், பிரஸ் மீட்டில் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கேப்டன் கோலி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் இடையே மோதல் என்ற செய்தி கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாய் பரவி பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் வழிவகுத்து கொடுத்துள்ளது. எனவே பிரஸ் மீட்டில் கலந்துகொண்டால் ரோஹித்துடனான மோதல் குறித்து கண்டிப்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதால், அதை தவிர்ப்பதற்காக பிரஸ் மீட்டே கொடுக்க வேண்டாம் என்று கோலி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கிளம்புவதற்கு முன் கேப்டன் கோலி கண்டிப்பாக பிரஸ் மீட் கொடுப்பார் என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கோலி பிரஸ் மீட் கொடுப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 

click me!