ஒரு தடவை தான்டா மிஸ்ஸாகும்.. ஒவ்வொரு தடவையும் இல்ல.. கனடா டி20 லீக்கில் அதிரடியாக ஆடி டொரண்டோ அணியை ஜெயிக்கவைத்த யுவராஜ்

By karthikeyan VFirst Published Jul 28, 2019, 5:33 PM IST
Highlights

கனடா டி20 லீக் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். அந்த அணியில் பொல்லார்டு, கிளாசன் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளனர். கடந்த 25ம் தேதி தொடங்கி இந்த தொடர் நடந்துவருகிறது. 
 

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ஓய்வு அறிவித்த பின்னர் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று கனடா டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார். 

கனடா டி20 லீக் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். அந்த அணியில் பொல்லார்டு, கிளாசன் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளனர். கடந்த 25ம் தேதி தொடங்கி இந்த தொடர் நடந்துவருகிறது. 

முதல் போட்டியிலேயே யுவராஜ் சிங் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின. அந்த போட்டியில் யுவராஜ் சிங் சரியாகவே ஆடவில்லை. 27 பந்துகள் பிடித்து வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து, அதுவும் அவுட்டே இல்லாததற்கு வாண்ட்டடா அவரே வெளியேறினார். அந்த போட்டியில் யுவராஜ் சிங்கும் சோபிக்கவில்லை. அவரது டொரண்டோ அணியும் தோற்றது.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் டுப்ளெசிஸ் தலைமையிலான எட்மாண்டன் ராயல்ஸ் அணியுடன் யுவராஜின் டொரண்டோ அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய எட்மாண்டன் அணியில் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் பென் கட்டிங் 24 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். 19 ஓவர் போட்டியாக நடந்த இந்த போட்டியில் 19 ஓவரில் 191 ரன்களை குவித்தது எட்மாண்டன் அணி. 

192 ரன்கள் என்ற கடின இலக்குடன் இறங்கிய டொரண்டோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர் 8 ரன்னும் மற்றொருவர் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர். அதன்பின்னர் கிளாசன் பொறுப்புடன் ஆடி 45 ரன்களை குவித்தார். கடந்த போட்டியில் சரியாக ஆடாத கேப்டன் யுவராஜ் சிங், இந்த போட்டியில் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 35 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொல்லார்டு 2 ரன்களில் வெளியேறினார். 

இதையடுத்து போட்டி பரபரப்பானது. மன்ப்ரீதி கோனி மற்றும் ரவீந்தர்பால் சிங் ஆகிய இருவரும் அடித்து நொறுக்கினர். சிங் 5 பந்துகளில் 17 ரன்களை விளாசினார். மன்ப்ரீத் கோனி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் அடித்தார். இவர்களின் அதிரடியால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தாலும் கூட, 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது டொரண்டோ நேஷனல்ஸ் அணி. 


 

click me!