ஒருநாள் அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் அறிமுகம்.. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jan 22, 2020, 10:06 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. இந்த தொடருக்கான டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது தவானுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அந்த போட்டியில் அவர் பேட்டிங் ஆடவில்லை. இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் தவான் இல்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பை தொடரில் மயன்க் அகர்வால் மாற்று தொடக்க வீரராக எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. உலக கோப்பை தொடருக்கே மயன்க் அகர்வாலை எடுத்த நிலையில், தற்போது அவர் புறக்கணிக்கப்பட்டு பிரித்வி ஷா அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒருநாள் அணியில் எடுக்கப்பட்ட மயன்க் அகர்வாலுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பிரித்வி ஷாவை அணியில் எடுத்துள்ளனர். பிரித்வி ஷா நியூசிலாந்தில் அபாரமாக ஆடினார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ ஆடிவரும் நிலையில், பயிற்சி போட்டியில் 100 பந்தில் 150 ரன்களை குவித்திருந்தார் பிரித்வி ஷா. இந்நிலையில், அவர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

Also Read - அண்டர் 19 உலக கோப்பையில் விக்கெட்டே போகாமல் அபார வெற்றி பெற்ற இந்தியா.. மொத்த மேட்ச்சும் 28 ஓவரில் முடிந்தது

டி20 அணியில் இடம்பெற்றிருந்த தவான், அதிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் அணியில் இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மற்றபடி இதற்கு முன்னர் இருந்த அதே வீரர்கள் தான். தவானை தவிர மற்ற அனைவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் தான். 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.
 

click me!