ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. 2 வீரர்கள் கம்பேக்

By karthikeyan VFirst Published Dec 24, 2019, 10:43 AM IST
Highlights

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணிக்கு 2019ம் ஆண்டு அனைத்து வகையிலும் சிறப்பானதாக அமைந்தது. உலக கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியது ஒன்றுதான் ஏமாற்றமளித்த சம்பவமே தவிர, 2019ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி தான். 

உலக கோப்பைக்கு பின்னர், இந்திய அணி ஆடிய அனைத்து தொடர்களையுமே வென்று அசத்தியுள்ளது. இந்த ஆண்டின் கடைசி தொடராக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், அடுத்ததாக, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான டி20 அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

Also Read - இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பவுலிங் யூனிட்டில் அதிரடி மாற்றங்கள்

அதற்கடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஆடுகிறது. இந்த தொடர் இந்தியாவில் தான் நடக்கவுள்ளது. ஜனவரி 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட், பெங்களூரு ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தவான் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் அவர் மீண்டும் இணைந்துள்ளார். தவான் காயத்தால் ஆடமுடியாமல் போன வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக இறங்கிய கேஎல் ராகுல் அபாரமாக ஆடி அசத்தினார். டி20, ஒருநாள் ஆகிய 2 தொடர்களிலுமே சிறப்பாக ஆடினார். தவான் மீண்டும் அணியில் இணைந்துவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தவான் - ராகுல் ஆகிய இருவரில் யார் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, குல்தீப், சாஹல் ஆகியோர் அணியில் உள்ளனர். காயத்திலிருந்து மீண்ட பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஷமி அணியில் இருக்கிறார். பும்ரா, ஷமி தவிர, நவ்தீப் சைனி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களும் அணியில் உள்ளனர். 

Also Read - சச்சின் - கங்குலி லெவலுக்கு கோலி - ரோஹித் வரவே முடியாது.. முன்னாள் கேப்டன் தடாலடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், சாஹல், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா. 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் டர்னர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஹேசில்வுட், சீன் அப்பாட், நாதன் லயன். 

click me!