சச்சின் - கங்குலி லெவலுக்கு கோலி - ரோஹித் வரவே முடியாது.. முன்னாள் கேப்டன் தடாலடி

By karthikeyan VFirst Published Dec 23, 2019, 5:04 PM IST
Highlights

விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்தனியாகவும் இணைந்தும் பல்வேறு சாதனைகளை படைத்துவருகின்றனர். 
 

விராட் கோலி மூன்றுவிதமான போட்டிகளிலும் சதங்களையும் சாதனைகளையும் குவித்து பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சிறப்பாக ஆடி, டெஸ்ட் அணியிலும் தனக்கான இடத்தை பிடித்துவிட்டதால், இனிமேல் அதிலும் சாதனைகளை படைப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

கோலியும் ரோஹித்தும் குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில்(ஒருநாள், டெஸ்ட், டி20 சேர்த்து) அதிக ரன்கள் அடித்ததில், 2455 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும் அவரைவிட வெறும் 13 ரன்கள் பின் தங்கி, 2442 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் உள்ளார். இந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 1490 ரன்களுடன் முதலிடத்திலும் 1377 ரன்களுடன் விராட் கோலி இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

Also Read - ஜெயசூரியாவின் 22 ஆண்டுகால ரெக்கார்டை தகர்த்தெறிந்த ரோஹித் சர்மா

ரோஹித்தும் கோலியும் கடந்த 3-4 ஆண்டுகளில் அதிபயங்கரமாக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், வெள்ளை பந்து(ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில், சச்சின் - கங்குலி, கோலி - ரோஹித் ஆகிய இரண்டு ஜோடிகளில் எது சிறந்தது என்ற விவாதம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார். கோலியும் ரோஹித்தும் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் என்று பேசப்படுகின்றனர். ஆனால் உண்மையாகவே, மிகவும் திறமையான, எதிர்கொள்வதற்கு சவாலான பவுலர்களை 15 ஆண்டுகாலம் எதிர்கொண்டு ஆடியவர்கள் சச்சினும் கங்குலியும்.

வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்), கர்ட்லி ஆம்ப்ரோஸ் - குர்ட்னி வால்ஷ்(வெஸ்ட் இண்டீஸ்), மெக்ராத் - பிரட் லீ(ஆஸ்திரேலியா), ஆலன் டொனால்டு - ஷான் போலாக்(தென்னாப்பிரிக்கா), சமிந்தா வாஸ் - லசித் மலிங்கா(இலங்கை) ஆகிய மிகச்சிறந்த மற்றும் அபாயகரமான பவுலர்களை எதிர்கொண்டு சச்சின் - கங்குலி ஆடியுள்ளார்கள். இந்த மாதிரியான பவுலர்களை எதிர்கொள்ளும்போதுதான் ஒரு பேட்ஸ்மேனின் உண்மையான திறமையை மதிப்பிட முடியும்.

Also Read - நாங்க ஜெயிச்சதுலாம் கூட பெரிய விஷயம் இல்ல.. ஜெயிச்ச விதம்தான் சிறப்பு.. கேப்டன் கோலி நெகிழ்ச்சி

விராட் கோலியும் ரோஹித்தும் இணைந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி ஏராளமான ரன்களை குவித்துள்ளனர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சச்சின் மிகக்குறைந்த போட்டிகளிலேயே ஆடியுள்ளார். கங்குலி அதுகூட ஆடவில்லை. சச்சின் - கங்குலி ஜோடிதான், அவர்கள் எதிர்கொண்டு ஆடிய பவுலர்களின் அடிப்படையில், சிறந்த ஜோடி என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 

click me!