#BANvsAUS கடைசி டி20: வங்கதேசத்திலிருந்து கொஞ்சமாவது மரியாதையுடன் நாடுதிரும்ப நினைக்கும் ஆஸி., டாஸ் ரிப்போர்ட்

Published : Aug 09, 2021, 05:35 PM IST
#BANvsAUS கடைசி டி20: வங்கதேசத்திலிருந்து கொஞ்சமாவது மரியாதையுடன் நாடுதிரும்ப நினைக்கும் ஆஸி., டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, படுமோசமாக ஆடி தொடரை இழந்தது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் படுமோசமாக பேட்டிங் ஆடி தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, 4வது டி20 போட்டியில்  வெற்றி பெற்றது.

கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. தொடரை இழந்திருந்தாலும், 3-2 என்ற மரியாதையுடனாவது வங்கதேசத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெற்றி முனைப்பில் கடைசி டி20யில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

பென் மெக்டெர்மாட், மேத்யூ வேட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், மிட்செல் மார்ஷ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி, அஷ்டான் டர்னர், அஷ்டான் அகர், நேதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்வெப்சன்.

வங்கதேச அணி:

முகமது நயீம், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா(கேப்டன்), நூருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன், மெஹிடி ஹசன், முகமது சைஃபுதீன், நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!