#ENGvsIND 2வது டெஸ்ட்: இந்திய அணி இவங்க 2 பேரையுமே தூக்கிட்டு அவங்கள சேர்க்கணும்.! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 9, 2021, 3:13 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரரும் வர்ணனையளருமான சஞ்சய் மஞ்சரேக்கர்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் அடித்தது.

95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் அடிக்க, இதையடுத்து 209 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருக்க, கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெறும் 157 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய இந்த போட்டியை மழை கெடுத்தது. கடைசி நாளான நேற்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2வது போட்டி வரும் 12ம் தேதி லண்டன் லார்ட்ஸில் தொடங்குகிறது. அந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்பின்னராக, அணியின் முதன்மை ஸ்பின்னரான அஷ்வினை எடுக்காமல் பேட்டிங்கை கருத்தில்கொண்டு ஜடேஜா எடுக்கப்பட்டது பெரும் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. 

இந்நிலையில், லார்ட்ஸில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு பதிலாக அஷ்வினை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல ஷர்துல் தாகூரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரியை எடுக்கவேண்டும் என்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.
 

click me!