கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேச அணி செய்த அரிதினும் அரிதான சம்பவம்.. இப்படி ஒரு முடிவு எடுக்குறதுக்கே தனி துணிச்சல் வேணும்

By karthikeyan VFirst Published Sep 5, 2019, 1:17 PM IST
Highlights

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
 

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 

இன்று காலை தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. உலக கோப்பை தோல்வி எதிரொலியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு மூன்று விதமான அணிகளுக்கும் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

ரஷீத் கான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஆஃப்கானிஸ்தான் அணி ஆடும் முதல் போட்டி இது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் என்ற பெருமைக்கு ரஷீத் கான் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 

ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் ரஷீத் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் டெஸ்ட் போட்டியில் ஆடிவருகின்றன. இருவரும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கோர் வீரர்கள். சன்ரைசர்ஸ் அணியில் ஆடிவருவதால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஃப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. 

இந்த போட்டியில் வங்கதேச அணி துணிச்சலான ஒரு முடிவை எடுத்து கிரிக்கெட் உலகையே மிரட்டியுள்ளது. இந்த போட்டியில் ஃபாஸ்ட் பவுலரே இல்லாமல் களமிறங்கியுள்ளது. ஆடும் லெவனில் இருக்கும் அனைத்து பவுலர்களுமே ஸ்பின்னர்கள். ஒரு ஃபாஸ்ட் பவுலர் கூட இல்லை. கிரிக்கெட்டில் ஆரம்ப காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் மாடர்ன் டே கிரிக்கெட்டில் இப்படி நடந்ததேயில்லை. எந்தவொரு அணியுமே ஃபாஸ்ட் பவுலரே இல்லாமல் இறங்கியதே இல்லை. 

ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு ஃபாஸ்ட் பவுலர் கூட இல்லாமல் ஆடுவது என்பது துணிச்சலான முடிவு மட்டுமல்லாமல் இதுவொரு அரிதான சம்பவமும் கூட. 

வங்கதேச அணி:

சௌமியா சர்க்கார், ஷட்மான் இஸ்லாம், மோமினுல் ஹாக், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன்(கேப்டன்), மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், மொசாடெக் ஹுசைன், மெஹிடி ஹாசன், டைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன். 

click me!