வெற்றி கட்டாயத்தில் களமிறங்கி வெளுத்து கட்டிய வங்கதேசம்..! பப்புவா நியூ கினிக்கு கடின இலக்கு

Published : Oct 21, 2021, 05:34 PM IST
வெற்றி கட்டாயத்தில் களமிறங்கி வெளுத்து கட்டிய வங்கதேசம்..! பப்புவா நியூ கினிக்கு கடின இலக்கு

சுருக்கம்

டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பப்புவா நியூ கினிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, 20 ஓவரில் 181  ரன்களை குவித்து 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.  

டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய தகுதிச்சுற்று போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பப்புவா நியூ கினியை எதிர்கொண்ட வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் ஷகிப் அல் ஹசனும் லிட்டன் தாஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் ஆகிவந்த நிலையில், லிட்டன் தாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் 5 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து நன்றாக ஆடிவந்த மற்றொரு சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் மஹ்மதுல்லா, பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்தில் ஆட்டமிழந்தார். 28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களுக்கு மஹ்மதுல்லா ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி சிறப்பாக முடித்துக்கொடுத்தார் சைஃபுதின். 20 ஓவரில் 181 ரன்களை குவித்த வங்கதேச அணி, 182 ரன்கள் என்ற கடின இலக்கை பப்புவா நியூ கினிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!