கிரிக்கெட் உலகில் சோகம்: வங்கதேச சீனியர் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 4:05 PM IST
Highlights

வங்கதேச கிரிக்கெட் வீரர் மஷ்ரஃபே மோர்டசாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் உயிரிழப்புகளையும் பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது கொரோனா. கொரோனாவால் உலகம் முழுதும் சுமார் 88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டுதான் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

ஆனாலும் ஒருசில முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவீன் தீவிர பரவலில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் உமர் டௌஃபிக்கிற்கு கொரோனா உறுதியான நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

இந்நிலையில், வங்கதேச அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான மஷ்ரஃபே மோர்டசாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. வியாழக்கிழமை இரவு மோர்டசாவிற்கு காய்ச்சல் இருந்தநிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் மோர்டசாவிற்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. 

வங்கதேச அணியின் சீனியர் வீரரான மஷ்ரஃபே மோர்டசா, 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். மோர்டசாவிற்கு கொரோனா உறுதியாகியிருப்பது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!