ஆசிய கோப்பையில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Aug 30, 2022, 2:22 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் இன்று மோதும் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணியும், அடுத்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணியும் வெற்றி பெற்றன.

இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. வங்கதேசம் அணி முதல் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பிலும், ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்திய அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்னுதான் பேரு.. 2 பேருமே மொக்கை ஷாட் ஆடி அவுட்டாகிட்டாங்க..! கவாஸ்கர் கடும் தாக்கு

2 அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் மோதும் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, சபிர் ரஹ்மான், மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

இதையும் படிங்க - இந்தியாவிற்கு எதிராக பாபர் அசாம் ஒரேயொரு தவறு செய்துவிட்டார்.. ஆனால் அது பெரிய தவறு! வாசிம் அக்ரம் கருத்து

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
 

click me!