மூன்றரை வருஷமா முதலிடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த பாபர் அசாம்..!

By karthikeyan VFirst Published Apr 14, 2021, 3:33 PM IST
Highlights

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்றரை ஆண்டு காலமாக முதலிடத்தில் இருந்துவந்த விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் வரிசையில் பாபர் அசாமும் இணைந்துள்ளார். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் பாபர் அசாம், கோலிக்கு நிகரான வீரராக மதிக்கப்படுவதுடன், கோலியுடன் ஒப்பிடப்படுகிறார்.

இந்நிலையில், 2017 அக்டோபரிலிருந்து ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துவந்த விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி அண்மைக்காலமாக சதமே அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்து, சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த ஒருநாள் தொடரில் கூட 3 போட்டிகளில் 129 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

ஆனால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் ஒரு சதத்துடன் 228 ரன்களை குவித்த நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள பேட்டிங் தரவரிசையில் 865 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார் பாபர் அசாம். 

விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். விராட் கோலியை சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்திலிருந்து பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் பாபர் அசாம்.
 

click me!