எனக்கு பாண்டிங் சொன்ன அறிவுரைகள்... லிஸ்ட் போட்ட ஆவேஷ் கான்

By karthikeyan VFirst Published May 16, 2021, 8:51 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் அபாரமாக பந்துவீசி அசத்திய ஆவேஷ் கான், அவர் ஆடும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனக்கு கூறிய அறிவுரை குறித்து மனம் திறந்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான். நல்ல எகானமியிலும் பந்துவீசி 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, டெல்லி கேபிடள்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஆவேஷ் கான், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் 2ம் இடத்தில் உள்ளார்.

ரபாடா, அஷ்வின், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா என டாப் பவுலர்கள் இருக்கும் டெல்லி அணியில் தனது அபாரமான பவுலிங்கால் தனித்து தெரிந்த ஆவேஷ் கான், முன்னாள் ஜாம்பவான்கள் பலரையும் கவர்ந்தார்.

14வது சீசனில் அவர் வீழ்த்திய 14 விக்கெட்டுகளில், பல இளம் பவுலர்களின் கனவு விக்கெட்டாக திகழும் தல தோனியின் விக்கெட்டும் ஒன்று. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனியை வெறும் இரண்டே பந்தில் ரன்னே அடிக்காமல் வெளியேற்றினார் ஆவேஷ் கான். இந்த சீசனில் ஆடியவரை, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ஹர்ஷல் படேலுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளார் ஆவேஷ் கான்.

ரிக்கி பாண்டிங் என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் வழிகாட்டுதலில் ஆடும் ஆவேஷ் கான், அவர் தனக்கு கூறிய அறிவுரை குறித்து பேசியுள்ளார். பாண்டிங் குறித்து பேசிய ஆவேஷ் கான், கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்துவிடாதே என்று பாண்டிங் என்னிடம் கூறினார். ஒவ்வொரு போட்டிக்கு முன்னும் பின்னும் என்னுடன் அமர்ந்து பேசுவார். எனது திட்டங்கள் மற்றும் அடுத்த கட்டத்திற்கு வளர்வதான வழிகள் ஆகியவை குறித்து என்னிடம் பேசுவார். ஒட்டுமொத்த தொடரின் மீதும் கவனம் செலுத்தாமல், அடுத்த போட்டியில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறுவார். எனது பலம் என்னவோ அதற்கேற்ப ஆட அறிவுறுத்துவதுடன், உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளித்து அதன்படி செயல்பட அறிவுறுத்தியுள்ளார் என்று ஆவேஷ் கான் தெரிவித்தார்.
 

click me!