இந்திய அணி ஆடும் லெவனில் அவரை கண்டிப்பா எடுக்கணும்.. 4ம் வரிசையில் அவரை இறக்கணும்.. முன்னாள் ஆஸி., வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 3:47 PM IST
Highlights

உலக கோப்பையில் யார் நான்காம் வரிசையில் ஆடப்போகிறார் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. உலக கோப்பையில், தொடக்கத்தில் சில போட்டிகளில் ராகுல் நான்காம் வரிசையில் இறங்கினார். ஷிகர் தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகியதால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கியதால் விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

எஞ்சிய ஒரு இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியை நேற்று வீழ்த்திய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி நான்காமிடத்தை பிடித்தது. 

இந்நிலையில், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் இந்தியாவுடன் ஆடிவருகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்டிங் தான் பெரிய சிக்கலாக இருந்தது. உலக கோப்பையில் யார் நான்காம் வரிசையில் ஆடப்போகிறார் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. உலக கோப்பையில், தொடக்கத்தில் சில போட்டிகளில் ராகுல் நான்காம் வரிசையில் இறங்கினார். ஷிகர் தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகியதால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கியதால் விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். 

ஆனால் நான்காம் வரிசையில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து அவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை ஆடும் லெவனில் சேர்த்து நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் விஜய் சங்கருக்கு ஆதரவாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் கேப்டன் கோலி. அதனால் விஜய் சங்கர் நீக்கப்பட வாய்ப்பில்லை என கருதப்பட்ட நிலையில், அவருக்கு கால் விரலில் காயம் என்பதால் அவர் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடிவருகிறார். 

இந்நிலையில், இந்திய அணி ஆடும் லெவனில் ஜடேஜாவை சேர்க்க வேண்டும் எனவும் நான்காம் வரிசையில் அனுபவ மற்றும் சீனியர் வீரரான தோனியை இறக்கலாம் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

விஜய் சங்கரை நீக்கிவிட்டு ஜடேஜாவை சேர்க்க வேண்டும். தோனியை நான்காம் வரிசையில் இறக்கினால் பின்வைசையில் ஜடேஜா பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார். ஒரு ஸ்பின் பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைக்கும் என்பது டீன் ஜோன்ஸின் கருத்து.
 

click me!