Glenn Maxwell: திடீரென ஓய்வை அறிவித்த கிளென் மேக்ஸ்வெல்! என்ன காரணம்?

Published : Jun 02, 2025, 01:55 PM ISTUpdated : Jun 02, 2025, 02:55 PM IST
Glenn Maxwell

சுருக்கம்

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Glenn Maxwell Retirement From ODI: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஓய்வுபெறுவதாக தெரிவித்த கிளென் மேக்ஸ்வெல், 2027ம் ஆன்டு 50 ஓவர் உலக்க்கோப்பை அணியில் எனது இடத்தில் இளம் வீரர் தயராவதற்காக ஓய்வை அறிவித்துள்ளதாகவும் சுயநலத்துக்காக விளையாட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு

ஆஸ்திரேலிய அணிக்கு தனி ஆளாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ள கிளைன் மேக்ஸ்வேல், 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தார். 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 33.81 சராசரியில், 126.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 4 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களுடன் 3,990 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் படைத்த சில சாதனைகளை கீழே காண்போம்.

1. ஒருநாள் போட்டிகளில் சேஸிஙில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்

2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 292 ரன்கள் சேஸிங்கில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தார். இது ஒருநாள் போட்டிகளில் ரன் சேஸிங்கில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். மேலும் ஓடிஐயில் இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்த போட்டியில் மேக்ஸ்வெல் தசைப்பிடிப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

2. ஆஸ்திரேலியாவுக்காக வேகமான ஒருநாள் சதம்

2023 உலகக் கோப்பையின் போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நெதர்லாந்துக்கு எதிராக கிளென் மேக்ஸ்வெல் வெறும் 40 பந்துகளில் சதம் அடித்தார். இது ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரின் வேகமான சதமாகும்.

3. அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்

மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் 126.70 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இது 100 அல்லது அதற்கு மேற்பட்ட ODI போட்டிகளில் விளையாடிய உலகின் எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தத்தில் மேக்ஸ்வெல் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்த பட்டியலில் ஆண்ட்ரே ரஸ்ஸல் முதலிடத்தில் உள்ளார். அவர் 56 ODI போட்டிகளில் 130.22 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

4. உலகக் கோப்பையில் 5வது இடத்தில் பேட்டிங் செய்து அதிக சதங்கள்

மேக்ஸ்வெல் உலகக் கோப்பையில் மூன்று சதங்களை அடித்தார். உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்தாவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!