2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. இளம் வீரர் அறிமுகம்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் காணும் பேட்ஸ்மேன்

By karthikeyan VFirst Published Jan 17, 2020, 1:21 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு அதிரடி மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றால்தான் இந்திய அணி தொடரை வெல்ல முடியும். 

எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் ஆடுகிறது இந்திய அணி. ராஜ்கோட்டில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், பவுலிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். 

Also Read - சுயநலத்தோட ஆடுன நிறைய வீரர்களை என் கெரியரில் பார்த்துருக்கேன்.. ஆனால் கோலி கிரேட்.. மனதார பாராட்டிய கம்பீர்

முதல் போட்டியில் தலையில் பந்து அடித்ததால் ரிஷப் பண்ட் சிகிச்சையில் இருப்பதால், அவருக்கு பதிலாக மனீஷ் பாண்டே அணியில் இணைந்துள்ளார். மனீஷ் பாண்டே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்யவுள்ளார். ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் எடுக்கப்பட்டுள்ளார். நவ்தீப் சைனி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் ஆடுகிறார்.

Also Read - ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக இந்திய அணியில் இணையும் சூப்பர் விக்கெட் கீப்பர்

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஜடேஜா, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா. 
 

click me!