AUS vs WI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

By karthikeyan VFirst Published Nov 29, 2022, 3:05 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. டி20 உலக கோப்பைக்கு முன்பாகவே இந்த டி20 தொடர் முடிந்துவிட்டது. அதன்பின்னர் உலக கோப்பையை முடித்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றது.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 30ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் பாண்டியா, ரிஷப், ராகுல்லாம் இல்ல.. அந்த பையன் தான்..! அடித்துக்கூறும் கம்பீர்

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்கள். 3ம் வரிசையில் மார்னஸ் லபுஷேன், 4ம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், 5ம் வரிசையில் டிராவிஸ் ஹெட் வழக்கமான பேட்டிங் ஆர்டர். 6ம் வரிசையில் கேமரூன் க்ரீன் ஆடுகிறார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஃபாஸ்ட் பவுலர்களாக கேப்டன் பாட் கம்மின்ஸுடன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் ஆடுகின்றனர். ஸ்பின்னர் நேதன் லயன்.

பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்லாம் இருக்காங்க.. ஆனால் அந்த பையன் வேற லெவல் பேட்ஸ்மேன்! ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

ஆஸ்திரேலிய அணி:

உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன்.
 

click me!