டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! மும்பை இந்தியன்ஸ் வீரர் சர்ப்ரைஸ் தேர்வு

By karthikeyan VFirst Published Sep 1, 2022, 1:44 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க - ஹர்திக் பாண்டியா செம பிளேயர்; அதுல எந்த டவுட்டும் இல்ல! ஆனால் அந்த ஒரு விஷயம் தான் கவலையா இருக்கு - கபில் தேவ்

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். அதேவேளையில், ரோஹித் சர்மா கேப்டன்சியில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் வலுவான பென்ச் பலத்துடன், மிகச்சிறந்த அணியாக திகழும் இந்திய அணிக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான, ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் ஃபின்ச், வார்னர், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், மிட்செல்ஸ்டார்க், அஷ்டான் அகர், ஹேசில்வுட், ஸாம்பா, கேன் ரிச்சர்ட்ஸன், பாட் கம்மின்ஸ் ஆகிய வழக்கமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

சர்ப்ரைஸ் தேர்வாக சிங்கப்பூரை சேர்ந்த ஆல்ரவுண்டர் டிம் டேவிட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டராக அசத்திய டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க - கோலி, ஒரு தலைமுறைக்கே முன்னோடி நீங்கள்..! விராட் கோலிக்கு நினைவுப்பரிசு வழங்கி நெகழவைத்த ஹாங்காங் அணி

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்,  க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்ஸன்.
 

click me!