இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.
வார்னர் அவுட் ஆனது கூட தெரியாமல் தூங்கிய மார்னஷ் லபுஷேன்!
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 48 ரன்னிலும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்னிலும், அஜிங்கியா ரஹானே 89 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 173 ரன்கள் பின்னிலை பெற்றது.
அவுட்டுன்னு நடையை கட்டிய ஆஸி வீரர்கள், சிராஜ் கேட்ட ரெவியூவால் திரும்ப வந்து பந்து வீசிய க்ரீன்!
பின்னர் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 1 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும், ஸ்டீவென் ஸ்மித் 34 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவென் ஸ்மித் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா 8ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கைப்பற்றிய ஜடேஜா, 2ஆவது இன்னிங்ஸில் 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 1902 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக 4 ஆது இன்னிங்ஸ் ரன் சேஸ் 263 ரன்கள் ஆகும். ஆனால், 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.