Latest Videos

ODI World Cup கைப்பற்றிய ஆஸ்திரேலியா – அரையிறுதி கூட வராமல் பாதியிலேயே நடையை கட்டிய பரிதாபம்!

By Rsiva kumarFirst Published Jun 25, 2024, 1:51 PM IST
Highlights

வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இக்கட்டான நிலையில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா வந்தது. இதில், 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுப் போட்டிக்கு வந்தது. இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6ஆவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.

இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம் சூடியது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றது. சூப்பர் 8 சுற்று போட்டியில் முதலில் வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

எனினும், ஆஸ்திரேலியாவிற்கு அரையிறுதிப் போட்டி இருந்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும். அதோடு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி பழி தீர்க்கும் வகையில் அதிரடியாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 92 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் அதிரடியால் 181 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. ஆனால், ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை நம்பியிருந்தது.

இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய வங்கதேசம் 105 ரன்கள் ரன்கள் மட்டுமே எடுத்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஆப்கானிஸ்தான் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சாம்பியனான ஆஸ்திரேலியா, 2010ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!