அடி மேல் அடி வாங்கும் ஆஸ்திரேலியா: WCயில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி – ஆஸி அரையிறுதிக்கு செல்லுமா?

Published : Oct 13, 2023, 10:18 AM ISTUpdated : Oct 13, 2023, 10:22 AM IST
அடி மேல் அடி வாங்கும் ஆஸ்திரேலியா: WCயில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி – ஆஸி அரையிறுதிக்கு செல்லுமா?

சுருக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் 10ஆவது லீக் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இதில், முதலில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீசியது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் குயீண்டன் டி காக் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு எய்டன் மார்க்ரம் 56 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. மெட்ரோ ரயில் அறிவித்த சூப்பர் ஆஃபர்..!

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜோஸ் ஹசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். அதன் பிறகு கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு முன்வரிசை வீரர்களான மிட்செல் மார்ஷ் 7 ரன்னிலும், டேவிட் வார்னர் 13 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

IND vs PAK போட்டிக்கு முன்னதாக CWC இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு – 12.30 மணிக்கு சங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி!

ஜோஸ் இங்கிலிஸ் 5, கிளென் மேக்ஸ்வெல் 3, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 என்று சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் 27 ரன்களில் வெளியேற, கடைசி வரை போராடிய மார்னஸ் லபுஷேன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் ஹசல்வுட் 2 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக ஆஸ்திரேலியா 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 177 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை... இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்க்க படையெடுக்கும் சூப்பர்ஸ்டார்களின் லிஸ்ட் இதோ

இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2ஆவது தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் கஜிசோ ரபாடா 3 விக்கெட்டும், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் தப்ரைஸ் ஷாம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். லுங்கி நிகிடி ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலமாக இந்த ஆண்டில் மட்டுமே 2ஆவது முறையாக ஆஸ்திரேலியா குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 2011 பாகிஸ்தானுக்கு எதிராக 176 ரன்களும், 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 151 ரன்களும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆஸ்திரேலியா 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச ரன்களுக்கு தோல்வியை தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முன்னதாக 1983 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 118 ரன்கள் வித்தியாசத்திலும், அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 101 ரன்கள் வித்தியாசத்திலும், 1979ல் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியுள்ளது.

அதுமட்டுமின்றி, 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 177 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்த ஆண்டில் மட்டுமே உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

IND vs AFG உலகக் கோப்பை போட்டி : ஒருவரை ஒருவர் தாக்கி கடும் சண்டையில் ஈடுபட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ

மேலும், நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பைக்கான 9 லீக் போட்டிகளில் ஒரு அணியானது குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறும் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். மேலும், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு தான் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..