குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் - அவசர அவசரமாக நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ்!

By Rsiva kumar  |  First Published Feb 20, 2023, 2:33 PM IST

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 1 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நடக்கிறது.

இந்த போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். மற்ற வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ் திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்ப வரவில்லை என்றால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயலபடுவார் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

கடந்த 2021 ஆம் ஆண்டு பேட் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றது முதல்  தற்போது வரையில் பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். கடந்த 2021- 22 ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரின் 2 டெஸ்ட் போட்டியை கொரோனா காரணமாக பங்கேற்கவில்லை. அதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

இதற்கு முன்னதாக மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் அணியில் இல்லாத போது தற்போது பேட் கம்மின்ஸும் அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் வார்னருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது இன்னிங்ஸில் அவர் ஆடவில்லை.

ஒரு நாள் தொடர்:

மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி - மும்பை
மார்ச் 19: 2ஆவது ஒருநாள் போட்டி - விசாகப்பட்டினம்
மார்ச் 22: 3ஆவது ஒருநாள் போட்டி  - சென்னை

ஆஸ்திரேலிய அணி:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத்  (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்

click me!