INDU19 vs AUSU19: இந்தியா அதிர்ச்சி தோல்வி – 4ஆவது முறையாக அண்டர்19 உலகக் கோப்பையில் சாம்பியனான ஆஸ்திரேலியா!

By Rsiva kumar  |  First Published Feb 11, 2024, 10:28 PM IST

அண்டர்19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.


தென் ஆப்பிரிக்காவில் அண்டர்19 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்தியா விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், இன்று நடந்த இறுதிப் போட்டிய்ல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஓரளவு கை கொடுக்கவே ஆஸ்திரேலியா 253 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய இந்தியா அண்டர் 19 அணிக்கு தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் மட்டுமே அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். கடைசியாக முருகன் அபிஷேக் 42 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக 43.5 ஓவர்களில் இந்தியா அண்டர்19 அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tap to resize

Latest Videos

இதன் மூலமாக ஆஸ்திரேலியா 4ஆவது முறையாக அண்டர்19 உலகக் கோப்பையில் சாம்பியனானது. இதற்கு முன்னதாக இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று சாம்பியனானது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!