SL vs AUS: வார்னர், ஸ்மித் கம்பேக்.. முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

Published : Jun 06, 2022, 02:47 PM IST
SL vs AUS: வார்னர், ஸ்மித் கம்பேக்.. முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலிய அணி நீண்ட சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளது. இலங்கை  -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டி20 போட்டி நாளை (ஜூன்7) நடக்கிறது. அனைத்து அணிகளுமே, இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருவதால், ஒவ்வொரு டி20 தொடரும் ஒவ்வொரு அணிக்கும் மிக முக்கியம். அந்தவகையில், இந்த தொடரில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் தான் களமிறங்குகின்றன.

நாளை நடக்கும் முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டி20 தொடர், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி ஆகிய போட்டிகளில் ஆடிராத வார்னரும் ஸ்மித்தும் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

இருபெரும் வீரர்கள் அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ள நிலையில், இருபெரும் வீரர்களின் பெயர்கள் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய இருவரும் அணியில் இல்லை. இந்த தொடரில் விரைவில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஸ்பின்னர், 3 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்குகிறது ஆஸி., அணி. மேக்ஸ்வெல்லும் ஸ்பின் பவுலிங் வீசுவார் என்பதால் அவரையும் சேர்த்தால் 2 ஸ்பின் ஆப்சன் உள்ளது.

முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!
IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!