Ashes Series: இங்கி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., ஆடும் லெவன் அறிவிப்பு..! அலெக்ஸ் கேரி அறிமுகம்

By karthikeyan VFirst Published Dec 5, 2021, 4:16 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் வரும் டிசம்பர் 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி வரும் 8ம் தேதி தொடங்குகிறது.

ஆஷஸ் தொடர் நெருங்கிய நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன், சக பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தின் விளைவாக கேப்டன்சியிலிருந்து விலகியதுடன், இந்த தொடரிலிருந்தும் விலகினார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக, பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரர்கள். 3ம் வரிசையில் மார்னஸ் லபுஷேன், 4ம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், 5ம் வரிசையில் டிராவிஸ் ஹெட், 6ம் வரிசையில் கேமரூன் க்ரீன் ஆகியோர் ஆடுகின்றனர்.

கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாது இந்த ஆஷஸ் தொடரிலிருந்தும் விலகிய டிம் பெய்ன் இனிமேல் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவது சந்தேகமே. அதனால் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி அறிமுகமாகிறார். ஃபாஸ்ட் பவுலர்களாக கேப்டன் கம்மின்ஸுடன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூவரும் ஸ்பின்னராக நேதன் லயனும் ஆடுகின்றனர்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!