டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! முக்கியமான வீரருக்கு அணியில் இடம் இல்ல

Published : Aug 19, 2021, 05:07 PM IST
டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! முக்கியமான வீரருக்கு அணியில் இடம் இல்ல

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஸாம்பா, அஷ்டான் அகார், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய அனைவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பிக்பேஷ் லீக்கில் நன்றாக ஆடிய ஜோஷ் இங்லிஸுக்கு டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ள நிலையில், அலெக்ஸ் கேரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

ரிசர்வ் வீரர்கள் - டேனியல் கிறிஸ்டியன், நேதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?