டி20 உலக கோப்பை: இந்தியாவுக்கு பக்கத்தில் கூட பாகிஸ்தான் டீம் வரமுடியாது..! ஆனால்... இக்கு வைக்கும் கம்பீர்

By karthikeyan VFirst Published Aug 19, 2021, 3:27 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை விட இந்தியா பன்மடங்கு வலுவான அணியாக திகழ்வதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும். 

அதிலும், ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எப்போதாவது மோதிக்கொள்கிறது என்பதால் இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ளன. க்ரூப் 2ல் முதல் போட்டியே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேதான். அக்டோபர் 24ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கிறது.

இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது எதிர்பார்ப்பு மிக அதிகம். இப்போதைக்கு பார்க்கையில், பாகிஸ்தானைவிட இந்தியா மிக மிக வலிமையான அணி. ஆனால் டி20 போட்டியை பொறுத்தமட்டில் எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்திவிடும் என்று கூறமுடியாது. ரஷீத் கான் ஒருவர் மட்டுமே ஆஃப்கானிஸ்தானுக்காக அபாரமாக ஆடி போட்டியின் முடிவை தீர்மானிக்க முடியும். அதேபோலத்தான் பாகிஸ்தானுக்கும்.. ஆனால் பாகிஸ்தான் மீதான அழுத்தம் தான் அதிகம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!