ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகள் ஒத்திவைப்பு..!

By karthikeyan VFirst Published May 23, 2021, 8:32 PM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் 14வது சீசன் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தியாவை கொரோனா கொடூரமாக அச்சுறுத்திவருவதால், ஜூன் 4ம் தேதி தொடங்குவதாக இருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடத்துவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளதால், வேறொரு ஆசிய நாட்டில் நடத்தலாம் என்றால், அதுவும் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஆசிய கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தாண்டு நடக்க வேண்டிய ஆசிய கோப்பை 2023ம் ஆண்டு தான் நடக்கும்.
 

click me!