#AUSvsIND அஷ்வின் விரித்த வலையில் வாண்டடா வந்து சிக்கிய ஸ்மித்..! வீடியோ

Published : Dec 26, 2020, 02:05 PM ISTUpdated : Dec 26, 2020, 02:07 PM IST
#AUSvsIND அஷ்வின் விரித்த வலையில் வாண்டடா வந்து சிக்கிய ஸ்மித்..! வீடியோ

சுருக்கம்

ஆஸி., அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பக்காவா திட்டமிட்டு டக் அவுட்டாக்கி அனுப்பினார் அஷ்வின்.  

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 195 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 48 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடிய டிராவிஸ் ஹெட் 38 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் மேத்யூ வேட் 30 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்ற அனைவரும் மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அந்த அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித், முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸை போலவே இந்த இன்னிங்ஸிலும் அஷ்வினின் பந்தில் டக் அவுட்டானார். 7 பந்துகள் பேட்டிங் ஆடியிருந்த ஸ்மித், ரன்னே அடிக்காமல் இருந்த நிலையில், அவர் ஆஃப் திசையில் சிங்கிள் எடுக்க முயற்சி செய்வார் என்பது தெரிந்தே, அவருக்கு ஆஃப் திசையில் பந்துவீசாமல் மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் திசையில் நல்ல லைன்&லெந்த்தில் வீசினார் அஷ்வின். ஸ்மித் அதை ஆடினாலோ அல்லது பந்து இன்சைட் எட்ஜ் ஆகி சென்றாலோ, அது ஷார்ட் லெக் திசையில் தான் செல்லும் என்பதால், ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்தி, மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப்பில் வீசினார் அஷ்வின். அதேபோல அந்த பந்தை ஸ்மித் அடிக்க, நேராக ஷார்ட் லெக்கில் நின்ற புஜாராவின் கைகளுக்கு சென்றது. அவர் எந்த தவறும் செய்யாமல் கேட்ச்சை பிடித்தார். 

ஸ்மித் எப்படி ஆடுவார் என்பதை அறிந்து பக்காவாக திட்டமிட்டு அருமையாக வீசிய அஷ்வினை கவாஸ்கர் கிரிக்கெட் 7 சேனலில் பாராட்டி பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

அந்த ஒரு தோல்வி மனசே உடைஞ்சு போச்சு.. உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்த ரோகித்
முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!