
உள்நாட்டு கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் தனது அபாரமான ஃபார்மைத் தொடரும் நிலையில் ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்டராக அவர் உருவெடுக்க வேண்டும் என மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் சர்ஃபராஸ் கான் கோவாவுக்கு எதிராக 75 பந்துகளில் 157 ரன்கள் விளாசியிருந்தார். இதில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும், இது அவரது பவர்-ஹிட்டிங் திறனை வெளிப்படுத்தியது. சர்ஃபராஸ் வெறும் 56 பந்துகளில் தனது சதத்தை எட்டி, ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் அவர் ஏழு போட்டிகளில் 203.08 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 65.80 சராசரியுடன் 329 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில், சர்ஃபராஸ் கான் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்., ''SMAT-ல் 100*(47), 52(40), 64(25), 73(22). இந்த ஃபார்ம் விஜய் ஹசாரே டிராபிக்கும் சீராகத் தொடர்கிறது, 55(49) ரன்களுக்குப் பிறகு இன்று 14 சிக்ஸர்களுடன் 157(75) ரன்கள் விளாசியுள்ளார்.
சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்க அஸ்வின் ஆதரவு
குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை தனது ஸ்வீப் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் மூலம் அவர் அடித்து நொறுக்குவது பிரமிக்க வைக்கிறது. 'அவன் கதவ தட்டல, இடிச்சி ஒடச்சிட்டு இருக்கான். சிஎஸ்கே நிச்சயமாக அவரது இந்த உச்சகட்ட ஃபார்மைப் பயன்படுத்தி அவரை பிளேயிங் XII-ல் சேர்க்க வேண்டும்? இந்த சீசனில் மஞ்சள் படைக்கு பேட்டிங்கில் ஒரு உண்மையான தலைவலி! ஐபிஎல் 2026-க்காக காத்திருக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சிஎஸ்கே அணி
SMAT-ல் வெற்றிகரமான ஆட்டத்திற்குப் பிறகு, ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கே, சர்ஃபராஸ் கானை ஐபிஎல் 2026 மினி-ஏலத்தில் ரூ.75 லட்சத்திற்கு இந்த வலது கை பேட்டரை வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஜேமி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், நூர் அஹ்மத், ராமகிருஷ்ணா கோஷ், சிவம் துபே, ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன், அகீல் ஹொசைன், பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபவுல்க்ஸ்.